ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகை ஹனி ரோஸ்

'வீரசிம்ம ரெட்டி' வெற்றி விழாவில் பாலையாவுடன் ஹனிரோஸ் கையுடன் கைகோர்த்து மது அருந்தும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகை ஹனி ரோஸ்
Published on

திருவனந்தபுரம்

தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹனிரோஸ்.

தெலுங்கிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் வீரசிம்ம ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்து தற்போது ஆந்திராவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி உள்ளார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் மன்னார்காட்டில் 'மைஸி ஃபியூச்சர்' என்ற புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடையைத் திறக்க சிறப்பு விருந்தினராக ஹனிரோஸ் சென்றார். இதையறிந்து சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் குவிந்தனர்.

கூட்டத்தை பார்த்த பவுன்சர்களும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். கடையை திறந்துவிட்டு ஹனிரோஸ் காரில் திரும்ப கிளம்பினார் அப்போது செல்பி எடுக்க ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் போலீசார் மற்றும் பவுன்சர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க ரசிகர்களை தடுக்க முடியவில்லை.சிலர் அவர் மீது விழுந்தனர். இருந்தும் அவர் பவுன்சர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றார்.

அந்த வீடியோவை ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அருகில் நிற்கும் போது கோபமாகப் பார்க்கும் ஹீரோயின்கள் போல் அல்லாமல், ஹனிரோஸ் சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறியது அனைவரையும் கவர்ந்து உள்ளது.

'வீரசிம்ம ரெட்டி' வெற்றி விழாவில் பாலையாவுடன் ஹனிரோஸ் கையுடன் கைகோர்த்து மது அருந்தும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com