தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி மட்டும் சொல்லிடமுடியாது- சரவணன் நெகிழ்ச்சி


தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி மட்டும் சொல்லிடமுடியாது- சரவணன் நெகிழ்ச்சி
x

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன் நடித்துள்ள  ‘சட்டமும் நீதியும்' வெப் தொடர் ரசிகர்களிடைவே வரவேற்பு பெற்று வருகிறது.

சென்னை,

சசிகலா செல்வராஜ் தயாரிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ள 'சட்டமும் நீதியும்' வெப் தொடர், கடந்த 18-ந்தேதி வெளியானது. சரவணன், நம்ரிதா, சண்முகம், இனியா ராம், திருசெல்வம், விஜயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப் தொடர், ரசிகர்களிடைவே வரவேற்பு பெற்று வருகிறது.

அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரவணன், 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக மறுபிரவேசம் எடுத்துள்ளார். இதன் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடிய நிகழ்வில், சரவணன் பங்கேற்றார். அவர் பேசும்போது, "90 களில் நான் ஹீரோவாக களமிறங்கியதில் இருந்து ரசிகர்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதற்கு நன்றி மட்டுமே சொல்லிட முடியாது. அதை விட நல்ல வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

தமிழில் வெற்றி பெற்ற சட்டமும் நீதியும் வெப் தொடரை, தெலுங்கில் இயக்கி வருகிறார்கள். விரைவில் இந்தியிலும் வெளியாக இருக்கிறது. இதற்கெல்லாம் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் காரணம்'' என்றார்.

1 More update

Next Story