‘‘இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன்’’ நடிகை சன்னி லியோன் கூறுகிறார்

உலக அளவில் கவர்ச்சி நடிகையாக பிரபலமானவர், சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து இருக்கிறார்.
‘‘இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன்’’ நடிகை சன்னி லியோன் கூறுகிறார்
Published on

லக அளவில் கவர்ச்சி நடிகையாக பிரபலமானவர், சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது, பல இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர், முதன்முதலாக ஒரு நேரடி தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தை வி.சி.வடிவுடையான் டைரக்டு செய்கிறார். பொன்சே ஸ்டீபன் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

தமிழ் படத்தில் நடிப்பது பற்றி சன்னி லியோன் கூறியதாவது:

இந்த படத்தின் கதை வரலாற்று பின்னணியில், இந்திய கலாசாரத்தை அடிப்படையாக கொண்டது. நான் இந்திய கலாசாரத்தை மதிக்கிறேன். குறிப்பாக, தென்னிந்திய கலாசாரத்தை நேசிக்கிறேன். அதனால், இனிமேல் எந்த படத்திலும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன். குத்து பாடல்களுக்கு ஆட மாட்டேன்.

என் பெயரை சொன்னாலே செக்ஸ்சும், கவர்ச்சியும்தான் நினைவுக்கு வருகிறது என்கிறார்கள். அதுதான் என் தனி சிறப்பு. என் அடையாளம். ஆரம்ப காலத்தில் நான் அப்படிப்பட்ட படங்களில் நடித்தாலும், இப்போது நடிப்பதில்லை. கவர்ச்சி மற்றும் செக்ஸ் கதைகளே என்னை தேடி வருகின்றன. இப்போது நான் நடிக்க இருக்கும் தமிழ் படத்துக்குப்பின், என் அடையாளம் மாறிவிடும். இப்படி ஒரு கதைக்காகவும், வேடத்துக்காகவும்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். டைரக்டர் வடிவுடையான் கதை சொன்ன நிமிடத்தில் இருந்து தமிழ் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு ஏற்கனவே குதிரை ஏற்றம் தெரியும். குங்பு, கராத்தே போன்ற பயிற்சிகளும் பெற்று இருக்கிறேன். ஆனாலும், இந்த படத்துக்காக மீண்டும் பயிற்சி பெற்று வருகிறேன்.

எனக்கு தென்னிந்தியா மீது தனி காதல். காரணம், தென்னிந்தியாவில்தான் எனக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் எனக்கு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்திய மொழிகளில் பழமையானநாகரீகமான தமிழ் மொழியில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com