செப்டம்பர் 12ம் தேதி ரிலீசாகும் 10 திரைப்படங்கள்

செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
செப்டம்பர் 12ம் தேதி ரிலீசாகும் 10 திரைப்படங்கள்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகமான திரைப் படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது. ஆகஸ்ட்.14-ல் மெகா பட்ஜெட்டில் உருவான ரஜினியின் 'கூலி' வெளியானதால், அதற்கு முந்தைய வாரமும் அடுத்தடுத்த வாரங்களிலும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 12-ம் தேதி 10 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம், குமாரசம்பவம், தணல், காயல், அந்த 7 நாட்கள், யோலோ, மதுரை 18, உருட்டு உருட்டு, தாவுத் ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com