13-வது ஆண்டு திருமண நாள்... திருமண புகைப்படங்களை வெளியிட்ட வித்யா பிரதீப்

வித்யா பிரதீப், தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
image courtecy:instagram@vidya.pradeep01
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை வித்யா பிரதீப். சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது இவர் ஆர்வம் காட்டிய நிலையில், படித்து கொண்டே மாடலிங் செய்தார். இதுவே இவருக்கு சினிமா பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

அதன்படி கடந்த 2010-ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான, 'அவள் பெயர் தமிழரசி' என்னும் படத்தில் டான்சராக நடித்திருந்தார். பின்னர் சைவம், பசங்க 2 மற்றும் தடம் ஆகிய படத்தில் நடித்தார். சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இவர் தனது 18 வயதிலேயே பிரதீப் மைக்கில் என்கிற புகைப்பட கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது 13-வது ஆண்டு திருமண நாளில் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன், கணவரை பற்றி மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில், கணவர் தன்னை குழந்தைபோல் பார்த்து கொள்வதாகவும், எனக்கு என்ன தேவை என்பதை அறிந்து புன்னகையோடு பார்த்து கொள்வதாகவும் இந்த 13 வருடங்களுக்கும் இன்னும் வரும் நாட்களுக்கும் கடவுளுக்கு நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளார். வித்யா பிரதீப் தற்போது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com