கால்பந்தில் 15 பதக்கங்கள்...இப்போது பிரபல நடிகை...விரைவில் நடிகருடன் திருமணம் - யார் தெரியுமா?


15 medals in football...now a famous actress...soon to marry an actor - who knows?
x

இவர் படிக்கும் போதே தனது பள்ளி கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார்.

சென்னை,

மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரிகிறதா?. அவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் சிறப்பு வேடங்களிலும் நடித்து பிரபலமானார்.

தற்போது திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வரும் இந்த நட்சத்திரம், இளம் வயதிலேயே தடகள வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினார். அதன்படி, படிக்கும் போதே தனது பள்ளி கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு போட்டிகளில் 15 பதக்கங்களை வென்றார்.

விரைவில் இவர் ஒரு நட்சத்திர நடிகரை திருமணம் செய்ய போகிறார். சமீபத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையிலும் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நடிகை யார் தெரிகிறதா? ஆம். அவர் வேறு யாருமல்ல, விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாதான்.

தமிழ் நாட்டின் தஞ்சாவூரில் 1989 நவம்பர் 20-ம் தேதி பிறந்த இவர், 2006 ஆம் ஆண்டு 'மனதோடு மழைக்காலம்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அறிமுகமான பிறகு, 'மறந்தேன் மெய்மறந்தேன்' மற்றும் 'திருடி' போன்ற படங்களில் தோன்றினார்.

2009-ம் ஆண்டு ரவி மோகன் நடித்த 'பேராண்மை' திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து 'அரவான்', 'பரதேசி', 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'கெம்பா' என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் கால் பதித்தார்

1 More update

Next Story