

சென்னை
நடிகர்கள் ரஜினிகாந்தும் , கமல்ஹாசனும் விரைவில் அரசியலுக்கு வருகிறார்கள். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்து உள்ளார்.
இந்த நிலையில் தனது கட்சியை பதிவு செய்வதற்காக நடிகர் கமல்ஹாசன் நாளை மறுநாள் 15 ந்தேதி தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளார். அன்று தனது கட்சியின் பெயரை பதிவு செய்கிறார்.