அடுத்தடுத்து 2 தோல்வி படங்கள்..ஷங்கரை மீட்டு எடுக்க உருவாகுமா 'வேள்பாரி'?


2 consecutive flops..Will Velpaari be made to redeem Shankar?
x

அடுத்தடுத்த இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார் ஷங்கர்

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'இந்தியன் 2' மிகப்பெரிய தோல்வியடைந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படமும் தோல்வி படமாகவே அமைந்தது.

இவ்வாறு அடுத்தடுத்த இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஷங்கர் அடுத்ததாக 'வேள்பாரி' படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது. அது குறித்து ஏற்கெனவே அவர் சில பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார்.

'வேள்பாரி' நாவலை ஷங்கர் படமாக்கினால் அது மிகச் சிறந்த படைப்பாக இருக்கும். இதனையடுத்து, ஷங்கரை மீட்டு எடுக்க 'வேள்பாரி' உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story