ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்


2 more women file sexual harassment complaints against Vedan
x
தினத்தந்தி 18 Aug 2025 12:00 PM IST (Updated: 18 Aug 2025 12:18 PM IST)
t-max-icont-min-icon

பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் பாலியல் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா,

கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் புகாரளித்துள்ளனர். பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக இரண்டு பெண்கள் முதல்- மந்திரி பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. முதல்- மந்திரிக்கு கிடைத்த புகார்கள் இன்று டிஜிபியிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி கொச்சிக்கு வரவழைத்து வேடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரும், வேடன் இசை நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட தன்னை, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக மற்றொருவரும் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வேடன் தாக்கல் செய்திருந்த மனு மீது கேரள ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

1 More update

Next Story