ரஜினி, ஏமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய்குமார் மோதும் நடு வான சண்டை காட்சி

ரஜினி, ஏமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய்குமார் மோதும் நடு வான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறது '2.0' படக்குழு.
ரஜினி, ஏமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய்குமார் மோதும் நடு வான சண்டை காட்சி
Published on


ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறது படக்குழு.

ரஜினி - ஏமி ஜாக்சன் - அக்ஷய்குமார் மூவரும் பங்குபெறும் பிரதான நடுவான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள். இதற்காக ரஜினி மிகவும் சிரத்தை எடுத்து நடித்து வருவதாக படக்குழுவில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தார்.ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் மற்றும் ஸ்டண்ட்மேன்களுடன் நடுவானில் 3 பேரும் மோது சண்டைகாட்சியை படமாக்கி வருகிறார்.

மார்ச் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 14-ம் தேதி '2.0' படத்தின் டீஸரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

வருகிற மார்ச மாதத்திற்குள், இந்த படத்தின் சூட்டிங்கை முடித்து விட்டு ரஜினிகாந்த் ப. ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்க தொடங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com