

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள், பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு ஆகியவற்றில் அனைத்து கட்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றன. ஒருப்பக்கம் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகள் நடந்து வந்தாலும் மற்றொருபுறம் பிரச்சாரங்களும் மும்முரமாக நடக்கிறது. இதனால் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக நிகழ்ச்சி ஒன்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார் சத்யராஜ். அவர் பேசியுள்ளதாவது, "டயலாக் பேசுறது வேற மேடை. அதை மேட்டர் இல்லாதவன் பேசி ஈசியா கைத்தட்டு வாங்கிட்டு போய்ருவான். இப்போ நான் வாங்கி காட்டுறேன் பாக்குறீங்களா எனக்கேட்டு, 'என்னம்மா கண்ணு' என்றார் கூட்டத்தை நோக்கி' உடனே அனைவரும் ஆரவாரம் செய்தார். தொடர்ந்து பேசிய சத்யராஜ், இதெல்லாம் வெட்டி உதார். எல்லா நடிகருக்கும் செய்ய தெரியும். அவுங்கவுங்க ரேஞ்சுக்கு இந்த வெட்டி உதாரை சொல்ல முடியும். ஆனால் உண்மையான கொள்கையை பேசுற மேடை இதுதான்.
எம்ஜிஆர் ரசிகனாக இருந்துக் கொண்டு திமுக மேடையில் வந்து நிற்குறதுக்கான காரணம் இது. இதற்கு மேல் இன்னொரு காரணம் இருக்கு. சினிமா நடிகரை பார்க்க கூட்டம் வரும். ஆனால் நம்ம குடும்பம் ஐந்தாண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்தது? இப்போ எப்படி இருக்கு என்பது ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனுக்கும், அவருடைய மனசாட்சிக்கும் தெரியும். அவர்கள் மனசாட்சி படி நடந்தால் நிச்சயமாக உதயசூரியன் சின்னத்துக்கு தான் ஒட்டு போடுவார்கள்.
போட்டி என்பது உங்களுக்கும், எங்களுக்கு என்பது எல்லாம் கிடையாது. இந்த தேர்தலில் போட்டி சமூக நீதிக்கும், சனாதானத்திற்கும் தான். உலகத்தில் இரண்டே இரண்டு சித்தாங்கள் தான் உள்ளது. அனைவருக்கும் எல்லாம் என்ற சித்தாந்தம். எல்லாமே எனக்கு தான்டா வேண்டும் என்பது ஒரு சித்தாத்தம். எல்லாம் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு போய் சேர வேண்டும் என்பது சனாதான சித்தாந்தம். அப்படி குறிப்பிட்ட இனத்துக்கு போய் சேரக்கூடாது. எல்லாருக்கும் போய் சேர வேண்டும் என்பது தான் திராவிட சித்தாந்தம். சமூக நீதி சித்தாந்தம். அப்போ எப்படி பார்த்தாலும் சமூக நீதி சித்தாந்தம் தான் வெல்லும். மதவாதத்துக்கும், சமூக நீதிக்கும் இடையில் தான் போட்டி. இவ்வாறு சத்யராஜ் பேசியுள்ளார்.