22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகர்களுக்கான விருது அறிவிப்பு

சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகர்களுக்கான விருது அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சமீபத்தில் தொடங்கி வைத்தார். பி.வி.ஆர் ராயப்பேட்டை, பி.வி.ஆர். மைலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளின் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குறிப்பாக விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மட்டுமின்றி, பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. விழாவின் நிறைவில் சிறந்த படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது 'மகாராஜா' படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. 'அமரன்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சாய் பல்லவி வென்றார்.

'மெய்யழகன்' படத்திற்காக 'மக்களுக்கு பிடித்த நடிகர்' என்ற பிரிவில் விருதை அரவிந்த்சாமி வென்றார். 'வேட்டையன்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது, துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது. லப்பர் பந்து படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் தினேஷ் வென்றார். 'வாழை' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பொன்வேல் வென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com