பிரபல நடிகரின் 2 மனைவிகளுக்கிடையே சண்டை செருப்பால் தாக்கி கொண்டனர்

பிரபல கன்னட நடிகரின் மனைவிகளுக்கிடையே ஏற்பட்ட குடும்ப சண்டை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
பிரபல நடிகரின் 2 மனைவிகளுக்கிடையே சண்டை செருப்பால் தாக்கி கொண்டனர்
Published on

பெங்களூர்

கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்து வருகிறார். 2 மனைவிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு மகளுடன் நேரில் சென்று முதல் மனைவி நாகரத்னா, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி அடிதடியில் இறங்கினர்.

இதுகுறித்து இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு சென்று நாகரத்னா தாக்கும் வீடியோ இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து நாகரத்னாவிடம் விசாரிக்க போலீசார் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துனியா விஜய் 2-வது மனைவியுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்து நாகரத்னா தவறுக்காக மகள்கள் பாதிக்க கூடாது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.தலைமறைவான முதல் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வீடியோ வெளியான காரணத்தால் நடிகர் அவமானத்தில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com