நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?

மீனாவிடம் குழந்தையின் எதிர்காலம் கருதி 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், குடும்ப நண்பர் ஒருவரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?
Published on

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த மீனா தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். கடந்த 2009-ல் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வித்யா சாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. விஜய்யின் தெறி படத்தில் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இதனால் பல வாரங்களாக மனம் உடைந்து துயரத்தில் இருந்த மீனாவை சக தோழி நடிகைகள் நேரில் சென்று ஆறுதல் சொல்லி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தற்போது மீண்டும் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மீனாவுக்கு 46 வயது ஆகிறது.

இந்த நிலையில் மீனாவிடம் குழந்தையின் எதிர்காலம் கருதி 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், குடும்ப நண்பர் ஒருவரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. மீனா தரப்பில் இதுகுறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது உறுதிப்படுத்தவில்லை. மீனாவுக்கு 2-வது திருமணம் செய்து கொள்ளும் எந்த திட்டமும் தற்போது இல்லை என்று மறுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com