பிரபல நடிகைக்கு 2-வது திருமணமா?

பிரபல குணசித்திர நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
பிரபல நடிகைக்கு 2-வது திருமணமா?
Published on

பிரபல குணசித்திர நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விஜய்யின் சிறந்த ஆக்ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டு விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் இந்த திருமணத்துக்கு அவரது மகள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறும்போது, நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை. மகளோ, குடும்பத்தினரோ 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை. இப்போது எனது சினிமா வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com