ரஜினிகாந்த்திற்கு அமிதாப் பச்சன் வழங்கிய மூன்று அறிவுரைகள்

தர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அமிதாப் பச்சன் வழங்கிய மூன்று அறிவுரைகள் குறித்து பேசினார்.
ரஜினிகாந்த்திற்கு அமிதாப் பச்சன் வழங்கிய மூன்று அறிவுரைகள்
Published on

மும்பை,

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 167-வது படமாக உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரைப்படத்தின் ட்ரெய்லர் மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு 3 அறிவுரைகள் வழங்கியதாக குறிப்பிட்டார்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும் , அரசியலில் நுழையக் கூடாது என்ற அந்த மூன்று அறிவுரைகளை தனக்கு அவர் வழங்கியதாக ரஜினிகாந்த் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com