"சூர்யவம்சம்" பட காட்சியை "ரீ கிரியேட்" செய்த "3 பிஎச்கே" படக்குழு

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஎச்கே’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
"சூர்யவம்சம்" பட காட்சியை "ரீ கிரியேட்" செய்த "3 பிஎச்கே" படக்குழு
Published on

சென்னை,

சித்தார்த் 40-வது திரைப்படமாக '3 பிஎச்கே' திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயானியும் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு '3 பிஎச்கே' வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற '3 பிஎச்கே' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யவம்சம் படத்தின் காட்சியை படக்குழு ரீ கிரியேட் செய்துள்ளது.அந்த காட்சியில், "சரத்குமார், தேவயானி உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றும், அதில் சித்தார்த் பங்கேற்காமல் தனித்து நிற்பது போன்றும்" சூர்யவம்சம் படத்தின் காட்சியை ரீ கிரியேட் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com