3 நிமிடங்கள்.. அனல் பறக்கும் 'பெத்தி' பட டிரெய்லர்!- சிரஞ்சீவி பாராட்டு

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது.
3 நிமிடங்கள்.. அனல் பறக்கும் 'பெத்தி' பட டிரெய்லர்!- சிரஞ்சீவி பாராட்டு
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வரும் 18ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி பெத்தி படத்தின் டிரெய்லர் பார்த்திவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "நான் 'பெத்தி' படத்தின் டிரெய்லரைப் பார்த்துவிட்டேன்!! சும்மா... மிரட்டல்! 3 நிமிடங்கள்...முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஒரு டிரெய்லர்!!

ராம் சரண்... புச்சி பாபு... ரகுமான்... ஒவ்வொருவரும் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்... மூவரும் இணைந்து, வேற லெவலில் கலக்கிவிட்டார்கள்! உங்கள் எதிர்பார்ப்புகள் எவ்வளவு உயரமாக இருந்தாலும்... இந்த டிரெய்லர் அனைத்தையும் மிஞ்சி நிற்கிறது. உணர்ச்சி... எழுச்சி... வெறித்தனம்... அனைத்தும் அடுத்த கட்டத்தில் உள்ளன! இந்த டிரெய்லரைப் பார்த்த பிறகு என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை! " இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com