ஓ.டி.டி.யில் வரும் மேலும் 3 படங்கள்

கொரோனாவால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்து தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த நூற்றுக்கணக்கான படங்கள் முடங்கி உள்ளன.
ஓ.டி.டி.யில் வரும் மேலும் 3 படங்கள்
Published on

கொரோனாவால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்து தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த நூற்றுக்கணக்கான படங்கள் முடங்கி உள்ளன. இதனால் புதிய படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். தமிழில் சூரரை போற்று, பூமி, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஏற்கனவே ஒ.டி.டி.யில் வந்துள்ளன. தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் (ஜூன்) ஓ.டி.டியில் வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய மேலும் 3 படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து இருப்பதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நரகாசுரன் படம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடிக்க தயாராகி உள்ளது. இந்த படம் பண பிரச்சினைகளால் நீண்ட காலம் முடங்கி கிடக்கிறது. வாழ் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருவி படம் மூலம் பிரபலமான அருண் புருஷோத்தமன் இயக்கி உள்ளார். எப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால், கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ளனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com