கஞ்சா பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகரின் மகன் உள்பட 3 பேர் கைது

அவர்களிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Image Credits: Grok AI
Image Credits: Grok AI
Published on

கொச்சி,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருவாங்குளம் அருகே உள்ள பகுதியில் 3 பேர் அமர்ந்து கஞ்சா பயன்படுத்துவதாக ஹில் பேலஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்த போது, 3 பேரும் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது. உடனே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், மலையாள பிரபல நடிகரான டினி டாம் என்பவரது மகன் ஆதம் சிம், அவரது நண்பர்கள் கார்த்திக், அமித் ஜார்ஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com