கோவா பட விழாவில் திரையிட சூர்யாவின் 'ஜெய்பீம்' உள்பட 3 தமிழ் படங்கள் தேர்வு

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் தேர்வாகியுள்ளது.
கோவா பட விழாவில் திரையிட சூர்யாவின் 'ஜெய்பீம்' உள்பட 3 தமிழ் படங்கள் தேர்வு
Published on

கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்மாட்டு கழகம் சார்பில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் திரையிடப்படும் இந்திய படங்களை தேர்வு செய்ய பிரபல டைரக்டர் வினோத் கனாத்ரா தலைமையில் 12 பேர் அடங்கிய தேர்வுக்குழு அமைத்து இருந்தனர்.

இந்த குழுவினர் இந்தியா முழுவதிலும் இருந்து வந்த திரைப்படங்களை ஆய்வு செய்தனர். இறுதியில் கதையம்சம் கொண்ட பிரிவில் 25 திரைப்படங்களை தேர்வு செய்தனர். இதில் தமிழில் இருந்து ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம், கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல், வெங்கட் இயக்கிய கிடா ஆகிய 3 படங்கள் தேர்வாகி உள்ளன.

தேசிய நீரோட்ட திரைப்படங்கள் பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கதையம்சம் அல்லாத படங்கள் பிரிவில் லிட்டில் விங்ஸ் என்ற தமிழ்ப்படம் உள்பட 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com