

லாஸ் ஏஞ்சலஸ்,
ஹாலிவுட் நடிகை ஜெண்டயா தோராயமாக 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தங்க பதக்கங்களால் செய்யப்பட்ட காதணிகளை அணிந்ததற்காக தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
லண்டனில் நடைபெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'தி ஒடிஸி' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஜெண்டயா பங்கேற்றார். அப்போது, வெள்ளை நிற ஜாக்மஸ் உடையுடன், பண்டைய ஈரானிய தங்கப் பதக்கங்களால் வடிவமைக்கப்பட்ட காதணிகளை அணிந்து வந்தார்.
இந்த காதணிகள் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க பொருட்களால் உருவாக்கப்பட்டவை என கூறப்படுவதால், அவற்றை ஆடை அலங்காரமாக பயன்படுத்தியது சரியா என்ற கேள்வியை எழுப்பி பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
ஜெண்டயா அணிந்திருந்த இந்த காதணிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் பரவி வருகின்றன.