எனக்கு திருமண பந்தம் 3-வது ஜென்மம் - நிக் ஜோனாஸ் குணத்தில் நெகிழ்ந்த பிரியங்கா சோப்ரா

எனக்கு திருமண பந்தம் 3-வது ஜென்மம் என நிக் ஜோனாஸ் குணம் குறித்து பிரியங்கா சோப்ரா விவரித்துள்ளார்.
எனக்கு திருமண பந்தம் 3-வது ஜென்மம் - நிக் ஜோனாஸ் குணத்தில் நெகிழ்ந்த பிரியங்கா சோப்ரா
Published on

அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் மற்றும் திருமணம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த ஆண்டு ஆடையை விளம்பரப்படுத்தும் நிறுவனத்துக்காக சேர்ந்து போஸ் கொடுத்து நட்பாக பழகினோம். அதன்பிறகு எங்களை இணைத்து மற்றவர்கள் பேசியதால் காதல் வயப்பட்டோம்.

திருமணபந்தம் யாருக்கு எப்படி எழுதி வைத்து இருக்கிறதோ அதன்படி நடக்கும் என்பார்கள். சிலருக்கு 7 ஜென்மங்கள் திருமண பந்தம் தொடரும் என்றும் சொல்வது உண்டு. எங்கள் இரண்டு பேருக்கும் இது 3-வது ஜென்மம் ஏற்கனவே நாங்கள் இருவரும் சேர்ந்து 2 ஜென்மங்கள் வாழ்ந்து இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

எங்களுக்குள் இருக்கும் காதலை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு நாள் நியூயார்க்கில் உள்ள எனது வீட்டுக்கு நிக் ஜோனாசை அழைத்தேன். அப்போது எனது தாய் வீட்டில் இருந்தார். என்னிடம் சிறிது நேரம் ஜாலியாக பேசிவிட்டு சென்றுவிட்டார். ஒரு முத்தம் கூட கொடுக்கவில்லை.

காரணம் கேட்டபோது உங்கள் அம்மா வீட்டில் இருக்கிறாரே? நல்லா இருக்காது என்று சொன்னார். பெரியவர்கள் இருக்கும்போது முத்தம் கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் அவரது குணத்தை பார்த்து அதிசயித்து போனேன். அந்த நாட்டில் இப்படி இருக்கிறாரே? என்று நினைத்தேன்.

இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com