3-ம் திருமண சர்ச்சை “நான் தவறு செய்தால் சட்டம் சும்மா விடாது” நடிகை வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.
3-ம் திருமண சர்ச்சை “நான் தவறு செய்தால் சட்டம் சும்மா விடாது” நடிகை வனிதா
Published on

பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. முதல் மனைவி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாதவரை வனிதா எப்படி திருமணம் செய்தார் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தார். நடிகை குட்டி பத்மினியும் குறை கூறினார். விமர்சனங்களுக்கு பதில் அளித்து வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள். முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவரை துன்புறுத்துவதும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் சட்டத்துக்கு எதிரானது.

இணைய தளத்தில் துன்புறுத்துவது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் செய்வதை நான் கடுமையாக எடுத்து இருந்தால் மன அழுத்தத்தில் விரக்தியாகி என்னையே துன்புறுத்தி இருக்கலாம். அது உங்களை கொலைகாரர்கள் ஆக்கி விடும். இதை யோசியுங்கள். நான் உண்மையில் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது.

கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நான் கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும். நான் தவறு செய்யவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com