நடிகையுடன் சேர்ந்து வாழும் நடிகர் வீட்டுக்கு செல்ல 3-வது மனைவிக்கு தடை

நடிகையுடன் சேர்ந்து வாழும் நடிகர் வீட்டுக்கு செல்ல 3-வது மனைவிக்கு தடை
Published on

பிரபல தெலுங்கு நடிகரான நரேஷ் தமிழில் கவுரவம், அயோக்யா, கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகையான பவித்ரா லோகேசுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்.

தன்னை விவாகரத்து செய்யாமல் பவித்ராவுடன் நரேஷ் சேர்ந்து வாழ்வதாக 3-வது மனைவி ரம்யா குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த வாழ்க்கையை நரேஷ் 'மல்லி பெல்லி' என்ற பெயரில் சினிமா படமாக எடுத்து அதில் பவித்ரா லோகேசுடன் சேர்ந்து நடித்து இருந்தார்.

இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் நரேசின் 3-வது மனைவியான ரம்யா பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ரம்யாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தணிக்கை குழு கற்பனை கதை என்று சான்றிதழ் அளித்து இருப்பதால் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இன்னொரு வழக்கில் பல வருடங்களாக பிரிந்து வாழும் 3-வது மனைவியான ரம்யா ஐதராபாத் நானாக்கிராம் கூடா பகுதியில் உள்ள நரேஷ் வீட்டுக்கு செல்ல கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com