வில்லனாக நடிக்க அர்ஜுனுக்கு ரூ.4 கோடி

வில்லன் வேடம் ஏற்க அர்ஜுனுக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
வில்லனாக நடிக்க அர்ஜுனுக்கு ரூ.4 கோடி
Published on

கதாநாயகர்கள் பலர் வில்லன்களாக நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அர்ஜுனும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கும் அர்ஜுனை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். முதலில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவருக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே விஷாலுக்கு பதில் அர்ஜுனை தேர்வு செய்துள்ளனர்.

இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்க அர்ஜுனுக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. வில்லன் கதாபாத்திரத்துக்கு இது அதிக சம்பளம் என்று பேசுகின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com