'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 விதமான கதைகள் - இயக்குனர் பிரிட்டோ

பாரதிராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 விதமான கதைகள் - இயக்குனர் பிரிட்டோ
Published on

சென்னை,

இயக்குனர் பாரதிராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் பிரிட்டோ படத்தை பற்றி கூறுகையில், "இப்படம் 4 விதமான கதைகளில் உருவாகியுள்ளது. அதாவது சென்னை, திருத்தணி, வேளாங்கண்ணி, மும்பை போன்ற 4 வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதைகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார்". இதற்கிடையில், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com