நாளை திரையரங்குகளில் வெளியாகும் 4 படங்கள் (16.05.2025)


நாளை திரையரங்குகளில் வெளியாகும் 4  படங்கள் (16.05.2025)
x
தினத்தந்தி 15 May 2025 1:22 PM IST (Updated: 15 May 2025 1:35 PM IST)
t-max-icont-min-icon

நாளை (16.05.2025) திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை (16.05.2025) வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

'டிடி நெக்ஸ்ட் லெவல்'

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

'ஜோரா கைய தட்டுங்க'

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜோரா கைய தட்டுங்க'. இப்படத்தினை ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இதில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

'மாமன்'

விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்'. இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். குடும்ப உறவுகளின் பின்னணியில் மாமன் படம் உருவாகியுள்ளது.

'லெவன்'

லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் கதையில் உருவாகியுள்ள படம் 'லெவன்'. இதில் நவீன் சந்திரா, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story