“4 விண்டோஸ்” படத்தின் டீசர் வெளியீடு

வெற்றி, சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா நடித்துள்ள ‘4 விண்டோஸ்’ படத்தின் டீசரை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார்.
“4 விண்டோஸ்” படத்தின் டீசர் வெளியீடு
Published on

இயக்குனர் நரேந்திர மூர்த்தியின் க்ரைம் த்ரில்லர் படமான '4 விண்டோஸ்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளையராஜா சேகர் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, சத்யராஜ், சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கூல் சுரேஷ், சச்சு, சேது, மாறன், சரண், வையாபுரி, டிஎம் கார்த்திக், ஸ்ரீநிக்தா, அய்ரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். என்.எஸ். உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் கூல் சுரேஷ், சச்சு, சேது, மாறன், சரண், வையாபுரி, டிஎம் கார்த்திக், ஸ்ரீநிக்தா, அய்ரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். என்.எஸ். உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ‘4 விண்டோஸ்’ படத்தின் டீசரை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார். டீசரை பார்க்கும்போது ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே சுழல்கிறது என்ற தோற்றத்தை அளிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com