“வடம்” படத்​தில் 5 கதைகள் - நடிகர் விமல்

கேத்திரன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘வடம்’ படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது.
“வடம்” படத்​தில் 5 கதைகள் - நடிகர் விமல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் ‘வடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நடராஜ் (நட்டி), சனஷ்கா ஸ்ரீ, முனிஷ்காந்த், பால சரவணன், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், தீபா ஷங்கர், இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர்.

மஞ்சு விரட்​டுப் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்கு பிரசன்னா எஸ்​. கு​மார் ஒளிப்பதிவு செய்​துள்​ளார். மார்ச் 6ல் வெளி​யாகும் இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

நடிகர் விமல் பேசும்​போது, “இயக்​குநர் கேந்​திரன் இந்​தக் கதையை என்​னிடம் சொன்​ன​போது, சொன்​னபடியே எடுத்து விடுவா​ரா ? என்ற சந்​தேகம் இருந்​தது. இது கமர்​ஷியல் படம்தான். ஆனால், கதை உள்ள கமர்​ஷியல் படம். அது​வும் 4, 5 கதைகள் இருக்​கும் படம். முதலில் இருந்து எல்​லா​வற்​றை​யும் சொல்லி கிளை​மாக்​ஸ்​சில் அனைத்​தை​யும் கச்​சித​மாக முடிப்​பார்.

படப்​பிடிப்​பில் நிறைய காட்​சிகளைப் படமாக்​கிக் கொண்டு இருந்தார். படம் பார்த்த பிறகு தான் எனக்​குத் திருப்​தி​யானது. அவர் என்​னிடம் சொன்ன கதையை கச்​சித​மாகப் படமாக்கி இருக்​கிறார். இதில் நானும், நட்டி நடராஜும் சண்​டைக் காட்​சி​யில் நடிக்கும்போது, அவர் எதைப் பற்​றி​யும் கவலைப்​ப​டாதே, அடிக்க வேண்​டும் என்​றால் அடித்து விடு, மிதிக்க வேண்​டும் என்​றால் மிதித்து விடு என சுதந்​திரம் கொடுத்​தார். அதனால் அந்த காட்சி அற்​புத​மாக வந்​தது” என்​றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com