ஒரே நபருடன் 6 ஆண்டுகள் என்பது நீண்டகாலம்...! கணவரை பிரிந்த பிரபல பாடகி..!!!

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், அவரது கணவர் சாம் உடனான மணமுறிவை முதன்முறையாக வெளிப்படுத்தி உள்ளார்.
ஒரே நபருடன் 6 ஆண்டுகள் என்பது நீண்டகாலம்...! கணவரை பிரிந்த பிரபல பாடகி..!!!
Published on

நியூயார்க்,

பிரபல பாப் பாடகியாக அறியப்படுபவர் பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 42). இவர் மாடல் மற்றும் நடிகரான சாம் அஸ்காரி (வயது 29) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், இவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு உள்ளது. இதனை பிரிட்னி தனது இன்ஸ்டாவில் நேற்று உறுதிப்படுத்தியதுடன், கணவருடனான மணமுறிவு பற்றி முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் தனது சமூக ஊடக பதிவில், ஒவ்வொருவருக்கும் தெரியும். நானும், சாமும் நீண்டகாலம் ஒன்றாக இல்லை... சிலருடன் 6 ஆண்டுகள் ஒன்றாக இருப்பது என்பது ஒரு நீண்டகாலம். நான் சிறிது அதிர்ச்சி அடைந்தேன்.

ஆனால், இந்த மணமுறிவு பற்றி விவரிப்பதற்காக நான் வரவில்லை. ஏனெனில், அது ஒருவரது வேலையுமல்ல. ஆனால், இந்த வலியை என்னால் எளிதில் எடுத்து கொள்ள முடியவில்லை.

எனது நண்பர்களிடம் இருந்து பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், மனமுருகி போய் விட்டேன். அதற்காக நன்றி.

உண்மையில் நான் எப்படி உணர்கிறேன் என்பதற்கான எனது உணர்வுகளையும், கண்ணீரையும் வெளிப்படுத்த நான் விரும்புகிறேன். ஆனால், எனது பலவீனங்களை மறைப்பதற்காக, சில காரணங்களும் என்னிடம் உள்ளன.

உங்கள் மீது நிபந்தனைகளின் கீழ் அல்ல. நிபந்தனையற்ற முறையில் அன்பு செலுத்தப்பட வேண்டும்... அதனால், நான் முடிந்தவரை வலிமையாக இருப்பேன். என்னால் முடிந்த சிறந்த விசயங்களை செய்வேன். உண்மையில் நான் நன்றாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறேன். என்னவானாலும், நல்ல நாட்களையே கொண்டிருக்கிறேன். புன்னகைக்கவும் மறப்பதில்லை என அவர் தெரிவித்து உள்ளார்.

பிரிட்னி மற்றும் சாம் இருவரும் 2016-ம் ஆண்டில் சந்தித்து கொண்டனர். பிரிட்னியின் இசை வீடியோ ஒன்றில் பணிபுரிவதற்காக சாம் சென்றபோது இந்த சந்திப்பு நடந்தது.

பல ஆண்டுகளாக டேட்டிங்கில் ஈடுபட்டு, ஒன்றாக சுற்றி திரிந்த இவர்களுக்கு இடையே 2021-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் இவர்களுடைய திருமணம் நடந்தது. இதில், பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். எனினும், ஓராண்டு கடந்த நிலையில், இவர்களது திருமணம் முடிவுக்கு வந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com