

சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் இன்று (13.03.2026) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
* கெணத்த காணோம்
பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஆர்.பி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கெணத்த காணோம்'. இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* கொலைச் சேவல்
இயக்குனர் வி.ஆர்.துதிவாணன் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள படம் "கொலைச்சேவல்". இந்த படத்தில் அறிமுக நடிகை தீபா பாலு நடித்துள்ளார். மேலும், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜய லட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோர் நடித்துள்ளார். ஆணவ கொலையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
* வெஞ்சென்ஸ்
அறிமுக இயக்குனர் ராகுல் அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வெஞ்சென்ஸ்'. இப்படத்தில் நடிகை அபர்ணதி முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜேம்ஸ், சச்சு, பிரதமராக நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏசி புரொடக்சன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.
* வவ்வல்ஸ்: அன் அட்லஸ் ஆப் லவ்
'வவ்வல்ஸ்: அன் அட்லஸ் ஆப் லவ்' என்பது 5 வித்தியாசமான காதல் கதையுடன், 5 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய படமாகும். இப்படம் காதலின் பல பரிமாணங்களை விவரிக்கும் ஆந்தாலஜி வகையைச் சேர்ந்தது. இதில் யூகிசேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
* போலீஸ் பேமிலி
இயக்குனர் பாலு இயக்கத்தில் சரவணன்,ராஜா மலைச்சாமி, காதல் சுகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ள படம் போலீஸ் பேமிலி. இந்த படத்திற்கு ஜெயா கே தாஸ் இசையமைக்க, ஜெயகுமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் மற்றும் ரவுடி இடையேயான ஈகோ மோதலை மையமாக வைத்து கிரைம் திரில்லரில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
* அந்தோனி
இயக்குனர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் 'அந்தோனி'. இதில் 'கயல்' வின்சென்ட், டி.ஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் யாழ்ப்பாண கடற்புற வாழ்வியலை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
* திவ்யா
ஆர்ஜேபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திவ்யா. இந்த படத்தினை கலா ரவி தயாரித்துள்ளார். காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.