71வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்

2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது.
71வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்
Published on

புது டெல்லி,

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கிவருகிறார். 

இந்நிலையில், வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார். தற்போது தனது இரண்டாவது தேசிய விருதை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com