71வது தேசிய திரைப்பட விருதுகள்: 3 தேசிய விருதை பெற்ற ‘பார்க்கிங்’ படக்குழு

2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
71வது தேசிய திரைப்பட விருதுகள்: 3 தேசிய விருதை பெற்ற ‘பார்க்கிங்’ படக்குழு
Published on

புது டெல்லி,

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கிவருகிறார்.

சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை பார்க்கிங் படம் வென்றது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.

இந்ந்நிலையில், பார்க்கிங் படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் , இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தேசிய விருதுகளை பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com