8 மணிநேர வேலை குறித்த சர்ச்சை: தீபிகா படுகோனேவுக்கு வித்யாபாலன் ஆதரவு


8 மணிநேர வேலை குறித்த சர்ச்சை: தீபிகா படுகோனேவுக்கு வித்யாபாலன் ஆதரவு
x

தினமும் 8 மணி நேர 'கால்ஷீட்' உடன்படிக்கைக்கு உடன்படாத தீபிகா படுகோனே 'ஸ்பிரிட்' படத்திலிருந்து விலகினார்.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கி வரும் 'ஸ்பிரிட்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்னர் திடீரென அவர் விலகினார். அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை திருப்தி திம்ரி நடித்து வருகிறார்.

தினமும் 8 மணி நேர 'கால்ஷீட்' உடன்படிக்கைக்கு உடன்படாததே, படத்தில் இருந்து அவர் விலக காரணம் என பேசப்படுகிறது. தீபிகா படுகோனேவுக்கு, ஜெனிலியா உள்ளிட்ட பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து நடிகை வித்யாபாலன் அளித்த பேட்டியில், 'திரை உலகில் உள்ள தாய்மார்களுக்கு 8 மணி நேரம் வேலை என்பது நியாயமானது என நான் நினைக்கிறேன். புதிய தாய்மார்களை நாம் இழக்க கூடாது என்பதற்காக ஒவ்வொரு துறைகளிலும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே பெண்களுக்கு அவர்களுக்கு வசதியாக குறைவான பணி நேரம் என்பது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன்.

நான் ஒரு தாய் அல்ல. எனவே 12 மணி நேரம் வேலை செய்ய என்னால் முடிகிறது. தீபிகா படுகோனே சொன்னதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story