நாளை தியேட்டரில் வெளியாகும் 8 திரைப்படங்கள் (06.03.2026)
சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 6ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
* வடம்
நடிகர் விமல் நடிப்பில், கேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "வடம்". டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் 5 தனித்தனி கதைகளை இணைத்து, மண் சார்ந்த உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’ நரேன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* முஸ்தபா முஸ்தபா
நடிகர் சதீஷ் தற்போது சுரேஷ் ரவியுடன் இணைந்து முஸ்தபா முஸ்தபா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை
பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். இதில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
* காதல் ரீசெட் ரிப்பீட்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
* ஓ பட்டர்பிளை
விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஓ பட்டர்பிளை'. ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
* அனோமி
நடிகை பாவனா தனது 90வது திரைப்படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை அறிமுக இயக்குனர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை அமைத்துள்ளார்.
* வசூல் மன்னன்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ரோலில் நடித்து பிரபலமான ஸ்ரீதேவா வெள்ளித்திரையில் ஹீரோவாக கால் பதித்துள்ளார். வேல் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வசூல் மன்னன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவாவுடன் இணைந்து வேல ராமமூர்த்தி, சரவண சுபையா ஆகியோர் நடித்துள்ளனர்.
* யார்ரா அந்த பையன் நான் தா அந்த பையன்
பால் ராஜ் இயக்கத்தில் காயத்ரி ரேமா, ஸ்வேதா ஸ்ரீ, ரவி மரியா, அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் ஆகியோர் நடித்துள்ள படம் யார்ரா அந்த பையன் நான் தா அந்த பையன். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். பிஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பால் ராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
* செல்லமடா நீ எனக்கு
ஆனந்த் சிவம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘செல்லமடா நீ எனக்கு’. தாயை வெறுக்கும் மகன், மகனுக்காக வாழும் தாய் ஆகியோரை மையப்படுத்தி, அதனுடன் மகனின் காதலையும் இணைத்து உருவாகியுள்ள படத்தில் வசீகரன், நேஹா, போஸ் வெங்கட், ‘பசங்க’ செந்தி, அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷா நடித்துள்ளனர்.

