''சூர்யாவையும் தீபிகாவையும் மனதில் வைத்துதான் இக்கதையை எழுதினேன்'' - ''8 வசந்தலு'' பட இயக்குனர்


8 Vasantalu: Suriya and Deepika Padukone were the first choices to play the leads
x
தினத்தந்தி 4 July 2025 4:15 PM IST (Updated: 4 July 2025 4:15 PM IST)
t-max-icont-min-icon

பலரை சூர்யா-தீபிகா படுகோனே நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்திருக்கிறது.

சென்னை,

பனிந்திர நர்செட்டி எழுதி இயக்கிய ''8 வசந்தலு'' படம் கடந்த மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும்நிலையில், இயக்குனரின் சமீபத்திய பேச்சு இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதன்படி, இந்தப் படத்தில் அனந்திகா சனில்குமார், ஹனு ரெட்டி மற்றும் ரவி தேஜா துக்கிராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ஆரம்பத்தில் தீபிகா படுகோனே மற்றும் சூர்யாவை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க விரும்பியதாக இயக்குனர் கூறி இருக்கிறார்.

இருப்பினும், தயாரிப்பாளர்கள் புதுமுகங்கள்ளுடன் செல்வது நல்லது என்று கூறியதால் இந்த யோசனையை கைவிட்டதாக கூறினார். இது, பலரை சூர்யா-தீபிகா படுகோனே நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்திருக்கிறது.

இயக்குனர் கூறுகையில், "நான் சூர்யாவையும் தீபிகாவையும் மனதில் வைத்துதான் இப்பட கதையை எழுதினேன். ஆனால், நட்சத்திரகள் நடித்தால் படத்தின் ஆன்மா தொலைந்து போகலாம், அதனால் புதுமுகங்கள்ளுடன் செல்வது நல்லது என்று தயாரிப்பாளர்கள் கூறினர்" என்றார்.

1 More update

Next Story