கவர்ச்சியில் களமிறங்க தயாராகும் '96' பட நடிகை

பொதுவாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கவுரி கிஷனுக்கு, பெரியளவில் படவாய்ப்புகள் அமையவில்லை.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகைகளில் ஒருவர் கவுரி கிஷன் . இவர் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் காதல் திரைப்படமாக வெளியான '96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அதனை தொடர்ந்து ‘மாஸ்டர்', ‘கர்ணன்', ‘அடியே', ‘ஹாட் ஸ்பாட்', ‘போட்' என பல படங்களில் நடித்துள்ளார். பொதுவாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கவுரி கிஷனுக்கு, பெரியளவில் படவாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் தனது ரூட்டை மாற்றி கவர்ச்சியாக இறங்கித்தான் பார்ப்போமே... என்ற ரீதியில் ஆயத்தமாகி வருகிறார். அதன் ஒருகட்டமாக லேசான கவர்ச்சி காட்டும் புகைப்படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.
கவர்ச்சி கைகொடுக்கும் என அம்மணி உறுதியாக நம்புவதால், கவுரி கிஷனின் அடுத்தடுத்த பரிமாணங்களை ரசிகர்கள் விரைவில் காண வாய்ப்புள்ளது. ‘இளமையில் கல்' என்ற தத்துவத்தை சினிமா பாணியில் நடிகை இப்போது தான் உணர்ந்திருக்கிறார்.






