'96' படத்தின் 2-ம் பாகம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார்

இயக்குனர் பிரேம்குமார் '96' படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார்.
'96' படத்தின் 2-ம் பாகம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார்
Published on

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது இயக்குனர் பிரேம்குமார், கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், சமீபத்திய நேர்காணலில் பேசிய இயக்குனர் பிரேம்குமார், '96' படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை எழுதிவிட்டதாக கூறியுள்ளார். இந்த படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை எழுதக் கூடாது என்ற முடிவில் இருந்தேன், ஆனால் எழுதி முடித்தவுடன் மிகவும் பிடித்த கதையாக மாறியிருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்

இதையடுத்து இந்த படத்தை உருவாக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியவர்களின் தேதிகளின் அடிப்படையில் படம் உருவாகும் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com