"96" 2ம் பாகம் விரைவில் வெளியாகும் - இயக்குனர் பிரேம் குமார்

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படத்தின் 2ம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
"96" 2ம் பாகம் விரைவில் வெளியாகும் - இயக்குனர் பிரேம் குமார்
Published on

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தை 2020ம் ஆண்டில் ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த பிரேம்குமார், அந்த படத்தில் சர்வானந்த், சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார். அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகிறார் பிரேம்குமார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கூறும்போது, இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இருவரும் மீண்டும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதையை அவர்கள் இருவரிடத்திலும் சொன்ன போது ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டார்கள். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com