“அழகிய தருணம்..” சீரடியில் விஜய்யுடன் செல்பி எடுத்த நடிகை கனிகா பதிவு

அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால், அவரை நேரில் சந்தித்தது அற்புதமான தருணம் என்று கனிகா பதிவிட்டுள்ளார்
“அழகிய தருணம்..” சீரடியில் விஜய்யுடன் செல்பி எடுத்த நடிகை கனிகா பதிவு
Published on

மராட்டிய மாநிலம், அகில்யா நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு தவெக தலைவர் விஜய் நேற்று சென்றார். உலக பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தார். அவர் மலர் தூவியும், சாய்பாபாவின் பாதத்தை தொட்டும் வழிபட்டார். கோவிலில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையிலும் அவர் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.

விஜய், ஷீரடிக்கு வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே காரில் ஏறிய விஜய், தனது ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

ஷீரடி கோயிலுக்குச் சென்ற விஜயை சந்தித்து நடிகை கனிகா செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கனிகா, “இது நடந்துவிட்டது. அவருடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரை நேரில் சந்தித்தது அற்புதமான தருணம். அவர், தனது பாதுகாப்புப் படையினரால் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும், சற்று நின்று, சில பணிவான, கனிவான வார்த்தைகளைப் பேசினார். வெற்றி உங்கள் பக்கம் இருக்கட்டும். நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com