கவர்ச்சி நடிகை மீது வழக்கு

ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கவர்ச்சி நடிகை மீது வழக்கு
Published on

இந்தி கவர்ச்சி நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனர் என்று ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், ''ராக்கி சாவந்த் என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி உள்ளார். பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேச சட்டத்தில் இடம் இல்லை. எனவே ராக்கி சாவந்த் மற்றும் அவரது வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com