தனுஷ் நடித்துள்ள 'கர’ படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

தனுஷ் நடித்துள்ள 'கர’ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.
தனுஷ் நடித்துள்ள 'கர’ படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
Published on

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘கர’ படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் பூவாய் அம்மன் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், 3 ஆண்டுகளுக்கு முன்பே ‘கர’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளோம். ஆனால், தாங்கள் பதிவு செய்த ’கர’ பெயரை தனுஷ் படத்தின் பெயராக வைத்து ரிலீஸ் ஆக உள்ளதாகவும், இதனால் தனுஷ் நடத்துள்ள ’கர’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com