சமந்தாவுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு

பிரபல கடையின் திறப்பு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார்.
சமந்தாவுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு
Published on

ஐதராபாத்,

நட்சத்திர நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற பின்னர் நீண்ட காலமாக தனிமையில் இருந்து வந்தார். சமீபத்தில், பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து, கோவை ஈசா மையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல கடையின் திறப்பு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அவரை நேரில் பார்த்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுக்க முயன்று அவரைச் சூழ்ந்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த சமந்தா, வேகமாக தனது காரை நோக்கிச் சென்று அங்கிருந்து புறப்பட்டார்.

ரசிகர்கள் கூட்டத்திலிருந்து அவர் தப்பிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்ற சம்பவத்தை சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலும் சந்தித்திருந்த நிலையில், ரசிகர்களின் கட்டுப்பாடற்ற நடத்தை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து இணையத்தில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com