கீர்த்தி சுரேசுக்கு நிறைவேறிய கனவு

கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கி அம்மாவின் முன்னால் பெருமையாக நிற்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேசுக்கு நிறைவேறிய கனவு
Published on

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் தனது கனவு நிறைவேறிய தருணங்களை பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், 'நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது பயந்தேன். என்னால் முடியுமா? ஒரு சகாப்தம்போல் வாழ்ந்த அவ்வளவு பெரிய நடிகையாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல என மலைத்தேன். கவலைப்பட்டேன். ஆனால் அந்தப் படத்துக்காக எனக்கு தேசிய விருது அறிவித்தபோது என்னைவிட என் அம்மா அதிகமாக சந்தோஷப்பட்டார். மொத்தத்தில் நான் நினைத்ததை சாதித்தேன் என தோன்றியது. ஏனென்றால் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது எனது கனவல்ல. என் அம்மாவின் கனவு. ஒரு காலத்தில் ஒரு படத்தில் என் அம்மாவுக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் வரவில்லையாம். அது பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லி வேதனைப்படுவார். அதைக் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு நாள் தேசிய விருது வாங்கி அம்மாவின் முன்னால் பெருமையாக நிற்க வேண்டும் என கனவு கண்டேன். அது நடிகையர் திலகம் படம் மூலம் நிறைவேறியதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். என் வாழ்க்கையில் அனுபவித்த பெரிய மகிழ்ச்சி அது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com