80 வயதில் 4-வது மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் பிரபல நடிகர்

லண்டனைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட பர்வீன் துசாஞ்ச் மீது காதல் கொண்டார் கபீர் பேடி.
80 வயதில் 4-வது மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் பிரபல நடிகர்
Published on

மும்பை,

பாலிவுட் நடிகர் கபீர் பேடி. சினிமா துறையை தாண்டி அவரது திருமண வாழ்க்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1971-ல் பாலிவுட்டில் வெளியான 'ஹல்சல்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கபீர் பேடி.

'மெயின் ஹூன் நா' போன்ற திரைப்படங்கள் மூலம் அங்கீகாரம் பெற்றார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், 2024ல் வெளிவந்த 'பெர்லின்' படம் வரை ஆக்டிவாக இருந்தார். அவரது திருமண வாழ்க்கை சர்ச்சை நிரம்பியதாகவே அறியப்படுகிறது.

கடந்த 1969-ம் ஆண்டு கபீர் பேடி மாடல் மற்றும் நடன கலைஞரான பிரதிமா பேடியை திருமணம் செய்து கொண்டார். பிரதிமாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

1970 க்குப் பிறகு, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் கடந்த 1977 இல் விவாகரத்து செய்தனர். இந்த தம்பதிக்கு பூஜா மற்றும் சித்தார்த் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சித்தார்த் 1977 இல் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது மகனின் மரணம் பிரதிமாவை மன அழுத்தத்திற்கு தள்ளியது.

பிரதிமா குப்தாவுடன் வாழ்ந்தபோது, கபீர் 1970 வாக்கில் பர்வீன் பாபியுடன் உறவில் இருந்தார். ஆனால் அவரை திருமணம் செய்யவில்லை. பர்வீனும் கபீரும் 1977 இல் பிரிந்தனர். அமெரிக்காவில் மாடலிங் செய்தபோது கபீர் பேடி, சூசன் ஹம்ப்ரீஸை சந்தித்தார். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது, அவர்கள் 1980 இல் திருமணம் செய்து 1990 இல் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஆடம் பேடி என்ற மகன் உள்ளார்.

1991 இல், கபீர், பிபிசி வானொலி தொகுப்பாளர் நிக்கி முல்கவ்கரை சந்தித்தார். இந்த ஜோடி 1992 இல் திருமணம் செய்து கொண்டது. நிக்கி கபீரை விட 20 வயது இளையவர். நிக்கி லண்டனில் வசித்து வந்தார், கபீர் இந்தியாவில் வசித்து வந்தார். இதனால், இருவருக்கும் இடையே தூரம் அதிகரித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2004ல் இருவரும் பிரிந்தனர்.

அதன்பிறகு லண்டனைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட பர்வீன் துசாஞ்ச் மீது காதல் கொண்டார் கபீர். பர்வீன் துசாஞ்ச் கபீரை விட 29 வயது இளையவர். 2016-ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில், பிரபல பாலிவுட் நடிகரான கபீர் பேடி 80 வயதில் 4வது மனைவியுடன் ஊர் சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் படங்கள் மட்டுமின்றி ஜேம்ஸ் பாண்ட் படமான ஆக்டோபுஸி படத்திலும் இவர் வில்லனாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் திரைப்படத் துறைகளில் பரந்த தொடர்புகளைக் கொண்டுள்ள திறமையான தயாரிப்பாளரான பர்வீன், தொடர்ந்து இந்த இரு துறைகளிலும் முனைப்புடன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடன் பொதுவெளியில் கைகோர்த்தபடி கபீர் பேடி ரொமாண்டிக்காக நடந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. காதலுக்கு வயதெல்லாம் முக்கியமில்லை என்றும் மனம் மட்டுமே முக்கியம் என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com