14 வருடமாக இரவு உணவு சாப்பிடாத பிரபல நடிகர்

14 வருடமாக இரவு உணவு சாப்பிடாத பிரபல நடிகர்
Published on

பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் விஷாலின் சமர், சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்து இருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சமந்தாவுடன் நடித்த பேமிலிமேன் வெப் தொடர் பெரிய வரவேற்பை பெற்றது.

தனது உணவு பழக்கம் குறித்து மனோஜ் பாஜ்பாய் அளித்துள்ள பேட்டியில், "நான் இரவு உணவை சாப்பிட்டு 14 வருடங்கள் ஆகிவிட்டது. எனது தாத்தா நல்ல உடல் வலுவோடு ஆரோக்கியத்துடன் இருப்பார். அவரைப்போல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடுகிறார் என்று கவனித்தேன். அவர் இரவில் சாப்பிடுவது இல்லை.

தாத்தாவின் உணவு பழக்கங்களை கடைபிடிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இரவு உணவை தவிர்த்து முழுமையாக இரவு சாப்பிடுவதை நிறுத்தினேன். மதிய உணவுக்கு பிறகு எனது வீட்டின் சமையலறை செயல்படாது. எங்கள் மகள் ஹாஸ்டலில் இருந்து திரும்பி வந்தால் மட்டுமே அது செயல்படும்.

இரவு சாப்பிடாமல் இருப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பசி எடுத்தால் அதிக தண்ணீர் குடிப்பேன். பிஸ்கட்டுகள் சாப்பிடுவேன். இரவு உணவை தவிர்த்தது நல்ல பலனை கொடுத்தது. நீரழிவு நோய், இதயம் சம்பந்தமான நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள இந்த பழக்கம் பெரிய உதவியாக இருந்தது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com