ரூ.190 கோடிக்கு பங்களா வாங்கிய பிரபல நடிகை

ரூ.190 கோடிக்கு பங்களா வாங்கிய பிரபல நடிகை
Published on

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா மும்பை மையப்பகுதியில் வாங்கி இருக்கும் புதிய பங்களா பற்றித்தான் பட உலகில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. இந்த பங்களா 4 மாடிகளை கொண்டது. இதன் விலை ரூ.190 கோடி ஆகும். பிரபல இந்தி தயாரிப்பாளரும், டைரக்டருமான யாஷ் சோப்ராவின் மனைவியான மறைந்த பமேலா சோப்ராவின் வீட்டை ஒட்டி இந்த பங்களா அமைந்து இருக்கிறது.

பங்களாவை சுற்றிலும் அழகிய தோட்டம், நீச்சல் குளம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளன. கடந்த 6 மாதங்களாக வீடு வாங்க மும்பையில் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியில் இந்த பங்களாவை ஊர்வசி ரவுத்தேலா வாங்கி இருக்கிறாராம். இந்தியில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் கூட அதிகபட்சம் ரூ.100 கோடி ரூ.120 கோடிக்கு மட்டுமே வீடுகள் வாங்கி உள்ள நிலையில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா 29 வயதிலேயே ரூ.190 கோடி பங்களாவை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

ஊர்வசி ரவுத்தேலா தமிழில் லெஜெண்ட் படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். 2013-ல் 'சிங் சாப் தி கிரேட்' இந்தி படம் மூலம் அறிமுகமானார். கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை சேர்த்தார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com