'அவதார்' படத்தில் நடிக்க ரூ.18 கோடி சம்பளம் தருவதாக ஜேம்ஸ் கூறினார், ஆனால்.. - பிரபல பாலிவுட் நடிகர்


A famous Bollywood actor says he missed the opportunity to act in Avatar
x
தினத்தந்தி 10 March 2025 11:39 AM IST (Updated: 10 March 2025 1:58 PM IST)
t-max-icont-min-icon

'அவதார்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக நடிகர் கோவிந்தா கூறி இருக்கிறார்.

மும்பை,

டைட்டானிக் படம் மூலம் புகழ்பெற்ற ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியான அவதார் படம் ஆச்சரியமான கற்பனை உலகம் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளால் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் நிகழ்த்தியது. இதில் சாம் வொர்த்திங்டன், ஜோ சல்தானா. ஸ்டீபன் லாங் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக நடிகர் கோவிந்தா கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், " அமெரிக்காவில் சர்தார்ஜி என்பவரை தொழில் ரீதியாக சந்தித்தேன். அவர் சில வருடங்களுக்குப் பிறகு, என்னை ஜேம்ஸுடன் ஒரு படம் பண்ண சொன்னார். அதனால் அவர்களை இரவு உணவிற்கு அழைத்து படம் குறித்து பேசினேன். அப்போது படத்தின் பெயர் அவதார் என்றும் அதில் ஹீரோ மாற்றுத்திறனாளி என்றும் ஜேம்ஸ் என்னிடம் கூறினார். இதற்காக அவர் எனக்கு 18 கோடி ரூபாய் தருவதாகவும், 410 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், நான் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன். படப்பிடிப்பு பிறகு ஆஸ்பத்திரியில்தான் இருப்பேன் என்றேன். நம்மிடம் இருக்கும் ஒரே கருவி நம் உடல்தான். சில சமயங்களில் தொழில் ரீதியாக சில விஷயங்கள் மிகவும் முக்கியமானதாக தோன்றினாலும், அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

1 More update

Next Story