'கம்பி கட்ன கதை' படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


கம்பி கட்ன கதை படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
x
தினத்தந்தி 23 Sept 2025 11:37 AM IST (Updated: 25 Sept 2025 10:07 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் நட்டி நட்ராஜ் அறிமுக இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

விஜய் நடிப்பில் வெற்றிப்பெற்ற 'யூத்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக வலம் வருபவர் நடிகர் நட்டி என்னும் நட்ராஜ். இவர் 'கர்ணன்', 'மகாராஜா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர், அறிமுக இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த படம் சதுரங்கவேட்டை பட பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் வெளியீட்டு இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், கம்பி கட்ன கதை படத்தின் வெளியீட்டு உரிமையை உத்ரா தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story